Kathir News
Begin typing your search above and press return to search.

பாக்கியராஜ், ஆர்.கே செல்வமணி இடையே மீண்டும் மோதல்! ஏன்?

பாக்கியராஜ், ஆர்.கே செல்வமணி இடையே மீண்டும் மோதல்! ஏன்?

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2022 10:45 AM GMT

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.





தமிழ் திரையுலகில் இயக்குனர் சங்க நிர்வாகிகளுக்கான பதவிக்காலம் முடிவடைகிறது, அதன் படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில் தற்பொழுதைய தலைவர்களான ஆர்.கே.செல்வமணி, பாக்கியராஜ் ஆகிய இருவரும் தனித்தனி அணி அமைத்து போட்டியிடுகின்றனர்.






இதில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்று துவங்கியது, வரும் 12'ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News