"இன்னொரு டீ சாப்பிடலாமா?" - வெளியான 'பேட்ட' படத்தின் டெலிட்டட் சீன்

"இன்னொரு டீ சாப்பிடலாமா" என்ற சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த்'தின் பேட்ட படத்தின் டெலிட்டட் சீன் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி ரஜினிகாந்த், சசிகுமார், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சிம்ரன் ஆகியோர் நடித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வெளியான படம் 'பேட்ட'. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இன்னமும் ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் இப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் பேட்ட படத்தின் வெளியாகாத காட்சி ஒன்றை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
'இன்னொரு டீ சாப்பிடலாமா?' என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த காட்சி விஜய் சேதுபதிக்கும், ரஜினிக்கும் இடையில் நடப்பதாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் மற்றும் வெகு சில காரணங்களினால் படத்தில் இடம்பெறாத இந்த காட்சி தற்பொழுது யூ ட்யூப் இணையத்தில் வைரலாகி வருகிறது.