ரவிதேஜா படத்தை கோலாகலமாக துவக்கிய சிரஞ்சீவி

நடிகர் ரவிதேஜா படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி துவங்கி வைத்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலையால் படப்பிடிப்பு மற்றும் படத்தின் நிகழ்ச்சி போன்றவைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் இரு பெரிய நடிகர்கள் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். தெலுங்கு கதாநாயகன் ரவிதேஜா இயக்குனர் சுதீப் வர்மா இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ராவணாசுரன் என பெயரிடப்பட்ட இப்படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் இதன் பூஜை நேற்று நடைபெற்றது.
இப்படத்தின் பூஜையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்ட் எடுத்து வைத்து துவக்கினார். இதனால் தெலுங்கு திரையுலகு ரசிகர்கள்களின் எதிர்பார்ப்பில் இப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது.