Kathir News
Begin typing your search above and press return to search.

முதன் முறையாக பிரிந்த வெங்கட்பிரபு, யுவன் கூட்டணி

முதன் முறையாக பிரிந்த வெங்கட்பிரபு, யுவன் கூட்டணி

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jan 2022 12:30 AM GMT

முதன் முறையாக வெங்கட்பிரபு, யுவன் கூட்டணி முறிந்துள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.





நடிகராகவும், பாடகராகவும் திரையுலகில் அடியெடுத்து வைத்த வெங்கட்பிரபு 'சென்னை 28' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'சென்னை 28' படத்தின் வெற்றிக்கு படத்தின் இசையமைப்பாளர் யுவனின் பங்கு பெரும் பங்கு வகித்தது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் யுவன் சங்கர் ராஜா என்ற இசையமைப்பாளருக்காகவே படத்திற்கு ரசிகர்கள் படையெடுத்தனர். பின்னர் வெங்கட்பிரபு'வின் தொடந்து 8 படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவே இசை. சமீபத்தில் வெளியான 'மாநாடு' படத்தின் வெற்றிக்கு கூட யுவன் பங்கு பெரியது.





இந்நிலையில் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு கூட்டணி பிரிந்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படமாகிய 'மன்மத லீலை' படத்திற்கு இசை வெங்கட்பிரபு தம்பியும், நடிகருமான பிரேம்ஜி இசையமைப்பாளர் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்த இந்த அறிவிப்பு தற்காலிகமானதாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News