நடிப்பு அசுரர்கள் இணையும் புதிய அந்தாலஜி

மிகப்பெரிய நடிகர்களான கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோர் இணையும் ஒரு அந்தாலஜி படம் உருவாக இருக்கிறது.
ஓ.டி.டி ஆதிக்கம் மெதுவாக தலையெடுக்க துவங்கிய பின்னர் அந்தாலஜி வகையான படங்கள் வருகை மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. வகை வகையான 5 அல்லது 7 கதைகள் மற்றும் வித்தியாசமான கதைக்களங்கள் என அந்தாலஜி வகையான படங்கள் ரசிகர்களுக்கு புதிய பார்வை அனுபவத்தை கொடுக்கிறது. இதனாலேயே பிரபல நடிகர்களின் பார்வை அந்தாலஜி வகையான படங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
அந்தவகையில் மலையாள பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளில் நடிப்பில் அசுரர்களான பிரபல நடிகர்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் என நால்வரும் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உருவாக இருக்கும் இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.