பாலகிருஷ்ணா'வின் 'அகான்டா' ஓ.டி.டி'யில் படைத்த மாபெரும் சாதனை

By : Mohan Raj
திரையில் மாபெரும் வெற்றியடைந்த பாலகிருஷ்ணாவில் 'அகான்டா' ஓ.டி.டி'யிலும் சாதனை படைத்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக திரையுலகம் பெரும்பாலும் படம் வெளியீட்டுக்கு ஓ.டி.டி தளத்தை நம்பி செயல்படுகிறது. திரையரங்குகள் மூடல், ரசிகர்களின் கொரோனா தொற்று பயம் என திரையுலகம் இதுவரை இல்லாத அனைத்து சவால்களையும் சந்தித்து வருகிறது. திருட்டு வி.சி.டி காலத்தில் கூட திரையுலகம் இவ்வளவு சிரமங்களை அனுபவித்ததில்லை. இந்நிலையில் சமீபத்தில் திரையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த பாலகிருஷ்ணா'வின் 'அகான்டா' திரைப்படம் ஓ.டி.டி'யில் வெளியாகிது.
ஓ.டி.டி'யில் வெளியான முதல் நாளே அதிக ரசிகர்களால் பார்வையிடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை 'அகான்டா' திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே பாலகிருஷ்ணா படங்களுக்கு தெலுங்கில் வரவேற்பு அதிகம் இந்த வெற்றியால் மேலும் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.
