Kathir News
Begin typing your search above and press return to search.

கதாநாயகனாகும் இயக்குனர் ஷங்கரின் மகன் - ஆனால் வேறு இயக்குனர்!

கதாநாயகனாகும் இயக்குனர் ஷங்கரின் மகன் - ஆனால் வேறு  இயக்குனர்!

Mohan RajBy : Mohan Raj

  |  27 Jan 2022 12:00 PM GMT

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜிதை ஹீரோவாக அறிமுகமாகிறார்.





தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தையை சுலபமாக பயன்படுத்தியது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு தனி பாணியையும் ஏற்படுத்தி பல வெற்றிகளை குவித்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் சமீபத்தில் தான் விருமன் படத்தின் மூலம் தன் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். தற்பொழுது தன்மகன் அர்ஜித் அவர்களை கதாநாயகனாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.




ஆனால் பல வெற்றிகளை பல கதாநாயகர்களை வைத்து சினிமாவிற்கு அளித்த சங்கர் தன் மகனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்ய வைக்க இருக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'காதல்', 'சாமுராய்', 'வழக்கு எண் 18/9' போன்ற தரமான படங்களை ஷங்கரின் உதவியாளராக இருந்து வந்து தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News