சித் ஸ்ரீராமை மனதார பாராட்டிய புஷ்பா!

பாடகர் சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் பான் இந்தியா படமான புஷ்பாவின் இடம்பெற்ற 'ஸ்ரீவள்ளி' பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார், இந்த பாடலை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சித் ஸ்ரீராமே பாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'ஸ்ரீ வள்ளி' பாடலை சித் ஸ்ரீராம் வீடியோவை பகிர்ந்து பெரிதும் பாராட்டியுளளார் அல்லு அர்ஜுன்.
இதில் அவர் குறிப்பிட்டுள்ளது, "ஓய்வாக இருக்கும்போது இதை எழுத வேண்டும் என்று இருந்தேன், எனது சகோதரர் 'சித்ஸ்ரீராம்' வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சிகள் 'ஸ்ரீவள்ளி' பாடலை மேடையில் பாடினார். அவரது குரலுக்கு ஆதரவாக எந்த இசையும் இல்லாமல் தனியாக பாடினார். எனது தலையில் ஏதோ மேஜிக்கல் நடக்கிறது என நினைத்தேன், அவருக்கு இசை தேவை இல்லை அவர்தான் இசை" என அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்.