Kathir News
Begin typing your search above and press return to search.

சூரி, நிவின் பாலியுடன் இயக்குனர் ராமின் படப்பிடிப்பில் ஜாலியாக மிஷ்கின்

சூரி, நிவின் பாலியுடன் இயக்குனர் ராமின் படப்பிடிப்பில் ஜாலியாக மிஷ்கின்

Mohan RajBy : Mohan Raj

  |  2 Feb 2022 12:15 PM GMT

ராம் இயக்கத்தில் சூரியுடன் நிவின்பாலி இணைந்து நடிக்கும் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.





தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம் இவர் தற்பொழுது நிவின் பாலி, அஞ்சலி ஆகிய இருவரையும் இணைத்து புதிதாக படம் ஒன்றை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.





இதனை சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, "இன்று இனியதொரு தொடக்கம் இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதன்மையாகப் இணைவதில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கினும் அந்த படப்பிடிப்பு தளத்தில் இணைந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News