திரையரங்கு உரிமையாளர்களை திருப்திபடுத்த வெளியாகும் 'ஆராட்டு'

திரையரங்கு உரிமையாளர்களை சமாதானப்படுத்த 'ஆராட்டு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கினது.
இந்தியாவிலேயே ஊட்டியில் அதிக படங்கள் வெளிவருவது கேரளாவில்தான், கேரள சினிமா ரசிகர்கள் உலகம் முழுவதும் இருப்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் சமீபத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் மற்றும் ப்ரோ டாடி ஆகிய படங்கள் ஓ.டி.டி'யில் வெளியானதால் பெரும்பாலான திரையரங்குகள் வருமானத்தை இழந்தன, காரணம் மோகன்லாலுக்கு என்று கேரள திரையுலகில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களை சமாதானப்படுத்த மோகன்லால் நடித்து வரும் 18'ம் தேதி வரவிருக்கும் 'ஆராட்டு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஓ.டி.டி'யில் வெளியாகும் எனவும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.