குழந்தை பிறப்பு ஒரு பாக்கியம் - பூரிக்கும் காஜல்அகர்வால்

குழந்தை பிறப்பு பாக்கியம், அது ஒரு கொண்டாட்டம் என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என ஒரு அறிக்கையை கேலியாக தயார் செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, "நம் வாழ்வின் மிக அழகான விலைமதிப்பற்ற பிரசவ காலத்தில் நாம் சங்கடமாகவும் அல்லது அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை, பிரசவத்திற்குப் பிறகு நாம் முன்பிருந்த அழகைத் திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது பழைய உருவத்தை திரும்பப் பெற முடியாமலும் போகலாம். இந்த மாற்றங்கள் இயற்கையானவை குழந்தை பிறக்கும் முழு செயல்முறையும் நாம் அனுபவிக்கும் பாக்கியம் கொண்ட ஒரு கொண்டாட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" இவ்வாறு உணர்ச்சியோடு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் காஜல்அகர்வால்.