Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் பட்டையை கிளப்பும் வலிமை டிரைலர்

தமிழ் அல்லாத பிற மொழிகளிலும் பட்டையை கிளப்பும் வலிமை டிரைலர்

Mohan RajBy : Mohan Raj

  |  11 Feb 2022 12:30 PM GMT

அஜித்தின் வலிமை படத்தின் பிறமொழி ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கும் படம் 'வலிமை', அஜித் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தமிழ் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் தமிழ் அல்லாத பிற மொழிகளில் டிரைலர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் வெளியானது. இந்த மூன்று மொழிகளிலும் ட்ரெய்லரை அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் வெளியிட்டனர். ஹிந்தி டிரைலரை அஜய் தேவ்கன், கன்னட டிரைலரை சுதீப், தெலுங்கு ட்ரெய்லரை மகேஷ் பாபு ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டனர்.




இப்படி பரபரப்பாக வெளியான ட்ரெய்லர் இதுவரையில் ஹிந்தியில் 14 லட்சம் பார்வையாளர்களும், தெலுங்கில் 9 லட்சம் பார்வையாளர்கள், கன்னட ட்ரெய்லர் 2 லட்சம் பார்வையாளர்கள் என இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. தமிழ் அல்லாத பிற மொழிகளில் ஒரே நாளில் அஜித் படத்திற்கு ட்ரெய்லர் வெளியாவது இதுவே முதல்முறை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News