மீண்டும் திரைப்படமாக வருகிறார் 'சக்திமான்' - மூன்று பாகமாக வெளியிட திட்டம்

தொண்ணூறுகளில் பிரபலமான 'சக்திமான்' சீரியல் தற்பொழுது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சினிமாவாக உருவாகி வருகிறது.
90'களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி தொடர் என்றால் அது 'சக்திமான்' தான், அன்றைய காலகட்டத்தில் ஆங்கில கதாபாத்திரங்கள் இந்தியாவில் அதிகம் பேசப்படாத நேரத்தில் அப்பொழுது சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்றால் குழந்தைகளுக்கு 'சக்திமான்' மட்டுமே என இருந்தது. அந்த வகையில் தொண்ணூறுகளில் குழந்தைகளின் மனதை வெகுவாக கவர்ந்த தொடர் 'சக்திமான்'.
இந்நிலையில் சக்திமான் தற்போது மீண்டும் திரைப்படமாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளது 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மூன்று பாகங்களாக வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அசத்தலான டீசரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் 'மனித குலத்தின் மீது இருளும் தீமையும் நிரம்பியுள்ளதால் சக்திமான் திரும்புவதற்கான நேரமிது' என குறிப்பிட்டுள்ளது, இணையத்தில் 'சக்திமான்' டீசர் வைரலாகி வருகிறது.