Begin typing your search above and press return to search.
எப்பொழுது வருகிறது ஆர்யாவின் 'கேப்டன்'?
By : Mohan Raj
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த 'கேப்டன்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளன.
டெடி படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதே கூட்டணியான இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன், ஆர்யாவும் மீண்டும் இணைந்தனர். அதிரடி சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை 'கேப்டன்' என்ற தலைப்பில் தயார் செய்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆர்யாவே தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி நடந்து வந்தது.
இந்நிலையில் தற்பொழுது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது, சில பின்னணி வேலைகள் முடிந்த பிறகு படத்தை வெளியிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது. படம் வெளியீடு பற்றிய தேதி விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது, டி.இமான் இசையமைக்க யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Next Story