'கலாவதி' சாதனையை தட்டி தூக்குமா 'பீஸ்ட்' 'அரபிக் குத்து'

By : Mohan Raj
இன்று மாலை 6 மணியளவில் வெளியான விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து' பாடல் நேற்று வெளியான மகேஷ்பாபுவின் 'கலாவதி' பாடல் செய்த சாதனையை முறியடிக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் விஜய் நடித்த ''பீஸ்ட்' படத்திலிருந்து அனிருத் இசையமைத்த 'அரபிக் குத்து' என்ற பாடலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டனர், சமூக வலைதளங்களில் அதிக வைரலாகும் இப்பாடலை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு தினம் முன்பாக அதாவது நேற்று வெளியான மகேஷ்பாபு நடித்த 'சர்க்காரு வாரி பட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நேற்று மாலை வெளியான 'கலாவதி' பாடல் தென்னிந்திய படங்களில் மிக விரைவாக 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுவே சாதனையாகும், இந்நிலையில் இன்று வெளியான 'அரபிக் குத்து' அந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
