சபரிமலையில் தன்னை தோளில் வைத்து தூக்கி சுமந்த 'டோலி' பணியார்களுக்கு மனதார நன்றி கூறிய சிரஞ்சீவி

By : Mohan Raj
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிரஞ்சீவி மலைக்கு செல்வதற்கு தன்னை தூக்கி சென்ற 'டோலி' பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள கோவில்களுக்கு சென்று நடிகர் சிரஞ்சீவி தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்து வருகிறார், தன் மனைவி சுரேகா உடன் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்ற அவர் அதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அப்பொழுது கீழே பம்பையில் இருந்து மேலே சன்னிதானம் வரை 'டோலி' சேவையைப் பயன்படுத்தி மலைப் பாதையை கடந்து தரிசனம் செய்துள்ளார்.
அதனை தனது சமூக வலைதளப் பதிவிலும் குறிப்பிட்ட அவர் 'டோலி' சேவையை பயன்படுத்தி தன்னை தூக்கி வந்த பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா'வால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததுதான் சிரஞ்சீவி'யின் தொடர் கோவில்கள் தரிசனம் என கூறப்படுகிறது.
