இளையராஜா பாடல்கள் - நீதிமன்றம் அளித்த தடை

பிரபல ஆடியோ நிறுவனங்கள் மீது இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
பிரபல ஆடியோ நிறுவனங்களான எக்கோ, அகி மியூசிக் போன்ற நிறுவனங்களுக்கு இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள் ஒப்பந்தத்தில் இருந்தது. ஆனால் ஒப்பந்தம் முடிந்த பிறகும் மீண்டும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தி வருவதாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாடல்களுக்கு உரிய காப்புரிமை பெறாமல் பயன்படுத்துவது சட்டப்படி தவறு என்பதால் நீதிபதிகள் உத்தரவு இளையராஜாவிற்கு சாதகமாகவே அமைந்தது.
அந்தவகையில் எக்கோ, அகி மியூசிக் போன்ற நிதி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. அதுமட்டுமல்லாமல் கிரி ட்ரேடிங், யூனிசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மார்ச் 21'ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.