சர்ச்சைக்குரிய அலியாபட் படம் - தடை கேட்டு வழக்கு

By : Mohan Raj
ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கங்குபை கத்தியவாடி'யின் வளர்ப்பு மகன்.
மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாகக் கொண்டு அதே பெயரில் தயாரான படத்தில் நடித்துள்ளார் ஆலியா பட், அஜய்தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது படம் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் இப்படத்தின் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
இந்நிலையில் கங்குபாய் கத்தியவாடியின் வளர்ப்பு மகன் படத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். 'மும்பை சிவப்பு விளக்கு ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்கள் அம்மாவை விட இந்த படத்தில் விலைமகளாக மாற்றி விட்டனர்' என குற்றம் சாட்டி இருக்கிறார், அதோடு மும்பை உயர்நீதிமன்றத்தில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
