Kathir News
Begin typing your search above and press return to search.

'காருக்கு இன்சூரன்ஸ் இல்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தரப்பு

காருக்கு இன்சூரன்ஸ் இல்லை - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தரப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  21 Feb 2022 11:15 AM GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த விஜயின் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என இரு தினங்களாக சமூக வலைதளங்களில் உலாவிய வதந்திக்கு விஜய் தரப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.





கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அப்பொழுது காலை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் வாக்களிக்க வந்தார். அப்பொழுது அவர் சிவப்புக்கலர் மாருதி சுசுகி செலிரியோ காரில் வந்தார் அந்த காரின் எண்ணை வைத்து அதற்கு இன்சூரன்ஸ் இல்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது இதனை வைத்து இரு தினங்களாக நடிகர் விஜய் இன்சூரன்ஸ் கட்டவில்லை என்பது போன்ற தகவல்களை பரப்பி வந்தனர்.





இந்நிலையில் நடிகர் விஜயின் தரப்பு அந்தக் காரின் இன்சூரன்ஸ் நகலை தற்பொழுது வெளியிட்டுள்ளது, அதில் வரும் மே 28'ம் தேதி வரை இன்சூரன்ஸ் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற வதந்தி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News