"நானும், அஜித்தும் வரும் காட்சியை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்" - ஹூமா குரோஷி

"நானும் அஜித் சாரும் வரும் காட்சி காட்சியைப் பார்த்தாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்" என வலிமை படத்தின் நாயகி ஹுமா குரோஷி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி ஹூமா குரோஷி அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, "எனது சினிமா கேரியரில் மிக சிறப்பான படம் எனது திறமையை பரிசோதித்துக்கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வினோத் சார் என்னுடைய கேரக்டரை நேர்மையான போலீஸ் அதிகாரியாக நிறைய ஆக்சன் காட்சிகளைக் கொண்ட பாத்திரமாக உருவாக்கி உள்ளார்" என்றார்.
"பில்லா 2 படத்தில் நான் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டியது வேறு சில காரணங்களால் அது நடக்கவில்லை, தற்போது இப்படத்தில் அஜீத் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் நடித்துள்ளேன். எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்" என்றார்.