இரண்டு தினங்களில் 'வலிமை' அள்ளிய வசூல்

By : Mohan Raj
'வலிமை' படத்தின் முதல் இரண்டு தினங்களில் பெற்ற வசூல் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த இரண்டரை வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம் 'வலிமை', தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் முக்கியமானது. பெரும் பொருட்செலவில் போனிகபூர் தயாரித்த இப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியாகியது, வழக்கமாகவே அஜித் படங்கள் என்றால் அதிக ஓபனிங் இருக்கும் முதல் 5 தினங்களுக்கு ரசிகர்கள் மட்டுமே திரையரங்குகளை அதிகமாக ஆரம்பித்திருப்பார்கள், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய ஓப்பனிங் ஹீரோ என்றால் அது அஜித் மட்டுமே! இந்நிலையில் வலிமை படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்தவகையில் கடந்த வியாழன் அன்று உலகம் முழுவதும் வெளியான 'வலிமை' படத்தின் தமிழக வசூல் மட்டும் 35 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் உலகம் முழுவதும் சேர்த்து மொத்தமாக 50 கோடி வரை இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படத் தயாரிப்பு நிறுவனம் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
