யுவனுக்கும், வினோத்துக்கும் என்ன பிரச்சனை? ஏன் வலிமையில் பின்னணி இசை இல்லை?
By : Mohan Raj
வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தாலும் பின்னணி இசை அவர் இல்லை என்ற விஷயம் ரசிகர்களை ஏமாற வைத்த நிலையில் அது பற்றிய கேள்விக்கு போனிகபூர் பதில் அளித்துள்ளார்.
மூன்று தினங்களுக்கு முன் வெளியான அஜித்தின் படம் 'வலிமை' போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா. வழக்கமாக அஜித் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தால் அதில் பி.ஜி.எம் பேசக் கூடிய ஒன்றாக இருக்கும், மேலும் படத்தின் பரபர சேசிங் காட்சிகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை இன்னும் மேலும் வலு சேர்க்கும். அந்த வகையில் வலிமை படத்தில் பின்னணி இசை தரமானதாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவில்லை பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்தார் என்ற தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் கேட்கப்பட்டதற்கு மழுப்பும் விதமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று தெரியாது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்தான், ஆனால் ஜிப்ரானும், வினோத்'தும் நண்பர்கள், படத்திற்காக ஆங்காங்கே சில டிப்ஸ்களை ஜிப்ரான் கொடுத்திருக்கலாம். யுவன் சிறந்த இசையமைப்பாளர், விரைவில் அவர் ஹிந்திப் படத்திறகு இசையமைக்க உள்ளார்" என பின்னணி இசை தொடர்பாக கேள்வி கேட்டதற்கு சமாளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார் போனி கபூர்.