Begin typing your search above and press return to search.
"நானா அரசியலுக்கா? சான்சே இல்ல!" - அறிக்கை வெளியிட்ட அஜித்

By :
"எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" என நடிகர் அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜீத் நடித்து சில தினங்களுக்கு முன்பு "வலிமை" திரைப்படம் வெளியாகி தமிழக திரையரங்குகளில் வெகுவிமரிசையாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தி பிரிவுக்கு அளித்த பேட்டியில் "நடிகர் அஜித்குமார் அரசியல் வருவதற்காக தயாராகிறார் என நினைக்கிறேன்" என கூறினார்.
அப்படி அவர் கூறியது வைரலான நிலையில் உடனே அஜித் தரப்பில் இருந்து "அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை இது போன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என விளக்கம் வெளியிட்டுள்ளது. இந்த விளக்கத்தை நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
Next Story