Kathir News
Begin typing your search above and press return to search.

ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து விலகிய இரட்டை இயக்குனர்கள்

ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து விலகிய இரட்டை இயக்குனர்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  7 March 2022 9:00 AM GMT

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திலிருந்து இரட்டை இயக்குனர்கள் விலகியுள்ளனர்.




கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குனராக அறிமுகமானவர் 'அன்பறிவ்' இரட்டை இயக்குனர்கள், இவர்கள் இதுவரை தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.




ஆனால் தற்பொழுது இந்த படத்தை 'அன்பறிவ்' சகோதரர்கள் இயக்கவில்லை என அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றுவதால் எங்களுக்கு வேலை காரணமாக இந்த படத்தை இயக்குவதில் இருந்து நாங்கள் விலகியுள்ளோம், மிகப் பெரிய வாய்ப்பை இழக்கிறோம் என்று நன்றாகவே தெரிகிறது" என தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News