Kathir News
Begin typing your search above and press return to search.

'அரபிக்குத்து' பூஜாவை புகழ்ந்த உதயநிதி

அரபிக்குத்து பூஜாவை புகழ்ந்த உதயநிதி

Mohan RajBy : Mohan Raj

  |  7 March 2022 9:47 AM GMT

பூஜா ஹெக்டே வை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகரும், எம்.எல்.ஏ'வுமான உதயநிதி ஸ்டாலின்.




விரைவில் வெளியாகவிருக்கும் "ராதேஷ்யாம்" படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது அதில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, "ராதே ஷ்யாம்" படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், 'ரெட் ஜெயன்ட்' மூவிஸ் வெளியிட்ட எப்.ஐ.ஆர் படத்தின் கூட்டத்திற்கு கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது, ஆனால் கட் அடித்து விட்டு இங்கு வந்திருக்கிறேன்.




நான் பிரபாஸின் ரசிகன், பாகுபலிக்கு முன் இருந்தே பிரபாஸ் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், மேலும் பூஜா ஹெக்டே இங்கு அரபி குத்து குத்தினார், இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' சார்பில் வெளியிடுகிறோம் பார்த்து மகிழுங்கள்" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News