இசைக் கச்சேரி நடத்தி துபாயை புரட்டிப்போட்ட இளையராஜா

அயல்நாடுகளில் கச்சேரி செய்த இளையராஜாவுக்கு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு துபாய் எக்ஸ்போவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு கூட்டம் அலைமோதியது.
கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது இசை ரசிகர்களையும் தன் ஸ்வரங்களால் கட்டிப் போட்டு வைத்தவர் இளையராஜா, இவர் தற்பொழுது வரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் துபாயில் நடந்து வரும் பிரபலமான 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து இசை கச்சேரி மார்ச் 5ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது, துபாய் எக்ஸ்போ ஷோவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டத்துடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் இளையராஜாவிற்கு இவ்வளவு கூட்டம் கூடியது இதுவே முதல் முறை என்கின்றனர் துபாயை சேர்ந்தவர்கள்.