ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா

துபாயில் உள்ள ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சர்ப்ரைஸாக விசிட் அடித்துள்ளார்
இளையராஜா தற்போது துபாயில் நடந்து வரும் துபாய் 'எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 5'ம் தேதி கோலாகலமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை பார்க்க துபாயில் கூட்டம் அலைமோதியது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டத்துடன் இந்தியா அல்லாத வெளிநாடுகளில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல் முறை, இந்நிலையில் அங்கு இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் "பிர்தோஸ்" ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்றுள்ளார். அப்பொழுது ஏ.ஆர்.ரகுமான் தனது ஸ்டூடியோவை இளையராஜாவிற்கு சுற்றிக் காண்பித்தார். அப்போது எடுத்த படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமான் "எங்கள் ஸ்டுடியோவிற்கு அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். அதற்கு இளையராஜாவிம் "விரைவில் இசைக்க துவங்கலாம்" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது