"நல்ல கூட்டம் வருதுங்க, படத்தை மாத்த முடியல" வலிமை பட திரையரங்கு உரிமையாளர்கள்

வெளியாகி மூன்று வாரங்கள் ஆனாலும் திரையரங்குகளில் ரசிகர்களிள் வரவேற்பு குறையாமல் நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், ஹூமா குரோஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்த படம் 'வலிமை', இப்படம் கடந்த பிப்ரவரி 24'ஆம் தேதி வெளியானது. படம் வெளிவந்து இன்றுடன் இரண்டு வாரங்கள் நிறைவடைந்து மூன்றாவது வாரம் துவங்குகிறது. இந்நிலையில் பல திரையரங்குகளில் வலிமை படத்திற்கான வரவேற்பு குறைந்தபாடில்லை, படம் நன்றாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் ஓடுவதாலும் கூட்டம் அதிக அளவில் வருவதாலும் படத்தை மாற்ற திரையரங்கு உரிமையாளர்கள் மாற்ற மறுக்கின்றனர்.
இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் 'ராதேஷ்யாம்' படங்கள் வெளியாக உள்ள நிலையில் 'வலிமை' படத்தை எடுத்துவிட்டு அப்படங்களை திரையிடுவதற்கு கூட திரையரங்கு உரிமையாளர்கள் யோசனை செய்து வருகிறார்கள், ஏனெனில் 'வலிமை' அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.