Kathir News
Begin typing your search above and press return to search.

"பப்பு டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" - யாரை குறிப்பிட்டார் பிரபுதேவா

பப்பு டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் - யாரை குறிப்பிட்டார் பிரபுதேவா

Mohan RajBy : Mohan Raj

  |  11 March 2022 12:45 PM GMT

"பப்புவோட வேலை சூப்பரா தான் இருக்கும்" என பிரபுதேவா கூறியது யாரைப்பற்றி என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.




இயக்குனர் பிரபுதேவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழக கூடியவர். இந்நிலையில் இயக்குனர் அவதாரத்தில் மீண்டும் இறங்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய புதிய சிங்கிளான 'பயணி' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகிவரும் இசை பாடலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபுதேவா.




அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, "ஹாய் பப்பு உங்களுக்கெல்லாம் ஐஸ்வர்யா எனக்கு அவங்க பப்பு, ஒன்பது வருஷம் கழிச்சு ஒரு சிங்கிள் இயக்கி இருக்காங்க இப்போ சிங்கிள் பண்றது தான் டிரென்ட் ஐஸ்வர்யா ரொம்ப பார்த்து பார்த்து தேர்வு செய்றவங்க, அவங்க நல்லா பண்ணி இருக்காங்க கண்டிப்பாக இது சூப்பரா இருக்கும் இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News