Kathir News
Begin typing your search above and press return to search.

மோகன்பாபுவின் மகள் "லட்சுமி மஞ்சு" பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு புகார்

மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு புகார்

Mohan RajBy : Mohan Raj

  |  11 March 2022 1:30 PM GMT

எனக்கும் பாலியல் தொல்லை இருந்ததாக நடிகை லட்சுமி மஞ்சு தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.





தென்னிந்திய திரையுலகில் தற்போது அடிக்கடி பாலியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன, "மீ டூ" புகார் என அழைக்கப்படும் அவற்றில் தயாரிப்பாளர் முதல் பாடலாசிரியர் வரை அனைவரும் சிக்குகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மோகன்பாபு மகளும், நடிகையுமான லக்ஷ்மி மஞ்சு தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.




இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு உள்ளேன் சக்தி வாய்ந்த ஒருவரின் மகள் என்பதால் எனக்கு அப்படி ஏதும் நடக்காது என ஆரம்பத்தில் நம்பி இருந்தேன், ஆனால் இரக்கமற்ற நபரால் அதனை நானும் சந்திக்க வேண்டியிருந்தது" என கூறியுள்ளார், இது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News