இன்று வெளியாகிறது புனீத்'ன் கடைசி படம் 'ஜேம்ஸ்'

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் என் கடைசி படமான 'ஜேம்ஸ்' இன்று வெளியாகிறது.
தென்னிந்திய தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரமும், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனுமாகிய புனித் ராஜ்குமார் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார, 46 வயதான ராஜ்குமாரின் மரணத்தை இன்றுவரை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! காரணம் கன்னட திரையுலகில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்ததும், உணர்வுகளை மதிக்கும் நடிகராக இருந்ததும் காரணம்.
இந்நிலையில் அவர் உயிரோடு இருக்கும்போது நடித்த கடைசி படமான 'ஜேம்ஸ்' படம் இன்று வெளியாகிறது. கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது கர்நாடகாவில் மட்டும் 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.