சீமானை நான் அவமதித்தேனா? இயக்குனர் விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை புறக்கணித்ததாக பரவும் செய்திக்கு இயக்குனர் ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தை இயக்குபவர் இயக்குனர் ரவிக்குமார், இவர் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் 'மாநாடு' பட விழாவில் கலந்து கொண்ட பொழுது சீமான், இயக்குனர் ரவிக்குமாரிடம் பேச முயற்சித்ததாகவும் அப்போது அவரை புறக்கணித்து விட்டு ரவிக்குமார் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
அவர் கூறியதாவது, "நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதை இல்லை அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது, ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்பொழுது அலட்சியமாக நடந்து கொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை நான் அப்படி நடந்து கொள்பவன் அல்ல இது பொய்யான செய்தி இதனை பரப்ப வேண்டாம்" எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.