ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஆந்திர அரசு அளித்த சிறப்பு சலுகை

ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாவதைத் தொடர்ந்து முதல் 10 நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை திரையரங்கின் உரிமையாளர்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது ஆந்திர அரசு.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர், சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த இரண்டு வீரர்களை பற்றிய கதை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும் வரும் மார்ச் 25ஆம் தேதி படம் உலகம் முழுக்க வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. அண்மையில் ஆந்திர அரசு சினிமா கட்டணத்தை வரையறை செய்து வெளியிட்டது அதன்படி அதிகபட்சம் சதாரண திரையரங்கில 120 ரூபாயும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 150 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்தது. இதனால் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர்கள் முதல்வரை சந்தித்து ஒரு மனு அளித்தனர், அதில் ஆர்.ஆர்.ஆர் படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சுதந்திர வீரர்கள் பற்றிய கதை என்பதாலும் படத்திற்கு தனி சலுகை வேண்டும் என கூறி இருந்தனர். தற்போது அந்த கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு முதல் 10 நாட்களுக்கு திரையரங்கு கட்டணத்தை திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ணயித்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது.