நாளை வாக்கு எண்ணிக்கை வெற்றி பெறுவது நாசர் அணியா? கே.பாக்கியராஜ் அணியா?

நாளை நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தல் வாக்குகளை நீதிமன்ற உத்தரவுப்படி எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இதில் எந்த அணி வெற்றி பெரும் என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23'ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் ஒரு அணியாகவும், நாசர் தலைமையில் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதித்தது, இதை தொடர்ந்து பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதனையடுத்து நாசர் மற்றும் விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது இதில் வாக்குகளை நாளை மார்ச் 20-ஆம் தேதி என உத்தரவிட்டது. அதன்படி நாளை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்டு பள்ளி வளாகத்தில் 8:00 மணிக்கு நடைபெறுகிறது, இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெற்றது நடிகர் விஷால் அல்லது கே.பாக்யராஜின் தலைமையிலான அணி என்பது தெரியவரும்.