'ப்ளூசட்டை மாறன்' கண்டிப்பா 'பீஸ்ட்' படத்தை நல்லவிதமா தான் சொல்லுவாரு - ஆர்.கே.சுரேஷ்

By : Mohan Raj
அஜித் சாரின் ரசிகனாக இருக்கிறது பெருமை ஆனால் அதான் என்னால் 'ப்ளூசட்டை மாறன்' சொன்னதை தாங்க முடியவில்லை என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'வலிமை' திரைப்படத்தை பற்றி 'ப்ளூ சட்டை மாறன்' தனது விமர்சனத்தில் மிகவும் தரம் தாழ்த்தி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து தமிழ் சினிமாவின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பாக தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஒரு அஜித் ரசிகனா 'ப்ளூசட்டை மாறன்' விமர்சனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, "இது இப்பொழுது வரைக்கும் ட்விட் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார், ஒரு ரசிகரின் தாக்கத்தையும் வெறுப்பையும் சாதகமாக எடுத்துக் கூடாது. 'பீஸ்ட்' படத்திற்கு என்ன விமர்சனம் பண்ண போறார்னு தெரியல கண்டிப்பா பாசிட்டிவான சொல்லுவார். ஏன்னா 'பீஸ்ட்' கதை எனக்கு தெரியும் நல்லா வந்திருக்கு படம். 'ஆன்ட்டி இந்தியன்' படம் ரிலீஸானப்ப பாராட்டி ட்வீட் போட்டடேன். அந்த தயாரிப்பாளர் எனக்கு நண்பர், ஆனால் ப்ளூ சட்டை மாறன் சொன்னதை தாங்க முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
