பல கோடி ரூபாய் நஷ்டத்தில் 'ராதேஷ்யாம்'

'ராதேஷ்யாம்' படத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து தான் இந்தியா முழுவதும் வெளியான படம் 'ராதேஷ்யாம்', 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியதாக தகவல் வெளியான நிலையில் இப்படம் இந்தியா முழுவதும் சிறந்த முறையில் வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் கடந்த வாரம் வெளியான 'ராதேஷ்யாம்' பெருமளவில் ரசிகர்களை ஈர்க்காததால் பல திரையரங்குகளில் காலி இருக்கைகளுடன் காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். இந்நிலையில் 300 கோடி ரூபாய் செலவில் படத்தின் வசூல் 200 கோடியை கூட தாண்டவில்லை என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது. இதனால் 100 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது 'ராதேஷ்யாம்' படத்தயாரிப்பு நிறுவனம்.