'என்னை மாதிரி யாரும் காதல் பண்ணிட முடியுமா?' - இளையராஜாவின் குறும்பு

இளையராஜா, பாரதிராஜா ஆகிய இருவரும் ஜாலியாக பங்கேற்ற 'காதல் செய்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
புதுமுகங்கள் நடித்துள்ள 'காதல் செய்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இளையராஜாவின் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் நடந்தது, இதில் இளையராஜா, பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவருக்கொருவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இருவருக்கும் சேர்த்து ஒரே ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய இளையராஜா கூறியதாவது, "இந்த படத்துக்கு காதல் செய்யும் பெயர் வச்சுருக்காங்க, என்னைப்போல் காதல் செய்தவன் இருக்க முடியாது. நான் எதை காதலிக்கனும்'ன்னு தெளிவா இருக்கேன். இந்த படத்தோட விழாவிற்கு இவ்வளவு பேர் வந்து ஆதரவு கொடுத்து இருக்கீங்க, ஆனா 16 வயதிலேயே படம் பண்ணும்போது இவ்வளவு கேமராக்கள் கிடையாது, மீடியா கிடையாது படக்குழுவினருக்கு என வாழ்த்துக்கள்" என தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் இளையராஜாவும், பாரதிராஜாவும் வரும் ஒருவருக்கு ஒருவர் புகழ்ந்து கொண்டு பேசியது ரசிகர்களை பரவசமடையச் செய்துள்ளது.