சி.பி.எப்.சி இணையதளத்தை முடக்கிய விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்களால் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் சி.பி.எப்.சி இணையதளம் முடக்கப்பட்டது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ஏப்ரல் 13'ஆம் தேதி அன்று திரைக்கு வரவிருக்கும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் தணிக்கைக் குழுவில் சான்றிதழுக்காக சென்றது.
இந்நிலையில் 'பீஸ்ட்' படத்திற்கு சி.பி.எப்.சி குழு நேற்று தணிக்கை சான்றிதழை வழங்க வழங்கியதாக தகவல் வெளியானது, இதை தொடர்ந்து படத்தின் தணிக்கை சான்றிதழ் இணையத்தில் கசிந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் 'பீஸ்ட்' படத்தின் தணிக்கை சான்றிதழை விஜய் ரசிகர்கள் அதிகளவில் சி.பி.எப்.சி இணையத்தில் பதிவிறக்க துவங்கியதால் இணையதளம் முடங்கியது.