உக்ரைன் நாட்டு நடிகையை வரவேற்ற சிவகார்த்திகேயன்

உக்ரைன் நாட்டைச்லசேர்ந்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் வரவேற்பு கொடுத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுராக் இயக்கத்தில் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு SK20 என தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் SK20 படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் SK20 படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியும், நடிகையுமான 'மரியா ரியாபோஷாப்கா' நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஹாட்ஸ்டார் இல் வெளியான 'ஸ்பெஷல் ஆப்ஸ்' இந்தி தொடரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வரவேற்று சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.