கம்பி வேலி போட்டு ரசிகர்களை தடுத்து நிறுத்தும் தெலுங்கு திரையுலகம்

ஆர்.ஆர்.ஆர் பட வெளியீட்டை தெலுங்கு திரையுலக ரசிகர்கள் கொண்டாட தயாராக இருக்கும் வேளையில் ஆர்.ஆர்.ஆர் வெளியிடப்படும் திரையரங்கு திரைக்கு முன்பாக கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் திரைப்படங்களை அதிகம் கொண்டாடும் மக்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள், படம் வெளியாகும் ஒவ்வொரு நாட்களும் திரையில் ஏறிய ஆடுவது, நடிப்பது போன்ற பல கொண்டாட்டமான செயல்களில் ஈடுபடுவார்கள். திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்கவே முடியாது, இது பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமல்லாது தங்களுக்கு இஷ்டமான எந்த ஹீரோ படம் வந்தாலும் இதை தொடர்கதையாக வைத்துள்ளனர் தெலுங்கு திரையுலக ரசிகர்கள்.
இந்நிலையில் நாளை மறுநாள் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் திரைக்கு வரவிருக்கிறது, இதனை முன்னிட்டு ஆர்.ஆர்.ஆர் வெளியாகும் திரையரங்குகளில் குறிப்பாக ஸ்ரீகாகுளம் உன்ன திரையரங்கு ஒன்றில் திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்திருக்கிறார்கள். மேலும் மேடையில் ஆணி பதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ரசிகர்கள் ஆர்வமிகுதியில் ஏறி ஆட்டம் போடாமல் இருக்கவே இந்த ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.