'ஜாலியோ ஜிம்கானா' பற்றி பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த படம் 'பீஸ்ட்', அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. வரும் ஏப்ரல் 13'ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் 'பீஸ்ட்' படத்தை தமிழில் நடிகை பூஜா ஹெக்டே அதிகமாக நம்பி வருகிறார் காரணம் அவரின் 'ராதேஷ்யாம்' படம் சரியாக போகவில்லை. 'பீஸ்ட்' படத்தின் அப்டேட் கொடுத்து அடிக்கடி தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் பற்றி குறிப்பிடும்போது, "செட்டில் உண்மையிலேயே 'ஜாலியோ ஜிம்கானா' வாக இருந்ததை நீங்கள் பார்க்க முடியும்" என பதிவிட்டுள்ளார். ஐந்து மொழிகளில் வெளியாகும் 'பீஸ்ட்' படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.