ராஜமௌலி அல்ல 'மகாராஜமௌலி' - ஆர்.ஆர்.ஆர் படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களை மனதார பாராட்டி உள்ளார்
தென்னிந்திய சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களையே சாரும், இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் நேற்று வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் பார்த்து பல திரையுலக பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து இயக்குனர் ஷங்கர் ராஜமௌலியை 'மகாராஜமௌலி' என பாராட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, "ஆர்.ஆர்.ஆர் வலுவான படம் காலம் முழுவதும் இது கண்டிப்பாக எதிரொலிக்கும், இணையற்ற அனுபவத்தைத் அந்த மொத்த குழுவினருக்கும் நன்றிகள். ராம்சரனின் பொங்கி எழும் நடிப்பு உங்கள் இதயத்தைக் கவர்ந்த தாக்குதலாக நடத்தும் என்.டி.ஆர், உங்கள் கற்பனை என இரண்டும் அருமை தலைவணங்குகிறேன் 'மகாராஜமவுலி'" என பெரிதும் பாராட்டியுள்ளார்.