வசூலில் சொல்லி அடித்த ஆர்.ஆர்.ஆர் - இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்த முதல் நாள் வசூல்

நேற்று வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் இந்திய சினிமா வரலாற்றில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் நேற்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படம் பற்றி பெரும்பாலும் நல்ல விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் இப்படம் வசூலில் சாதனை படைக்கும் என முன்பு எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் 239 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 10 கோடி, கேரளாவில் 3 கோடி, அமெரிக்காவில் 26 கோடி, இங்கிலாந்தில் 2 கோடி, ஹிந்தியில் 20 கோடி, கர்நாடகத்தின் 16 கோடி இது மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 74 கோடி கிடைத்துள்ளதால் படம் முதல் நாள் மட்டும் 239 கோடி வசூலை தாண்டி இருக்கும் என தகவல்கள் வருகின்றன. மேலும் படம் விரைவில் 500 கோடியைத் தொட வாய்ப்புகள் இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.