உருவ கேலி செய்த தொகுப்பாளருக்கு பளார் விட்ட வில் ஸ்மித் - ஆஸ்கார் மேடையில் நடந்த களேபரம்

ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் தன்னுடைய மனைவி பற்றி உருவ கேலி செய்த தொகுப்பாளரின் கன்னத்தை பளாரென அடி கொடுத்துள்ளார் நடிகர் வில் ஸ்மித்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94'வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் வில் ஸ்மித், இந்த நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் பிரபல ஸ்டாண்டர்ட் காமெடியனாக கிரிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் நடிகர் வில் ஸ்மித் என் மனைவி ஜடா ஸ்மித்'தின் மொட்டைத்தலை குறித்து நகைச்சுவையாக பேசினார்.
இவ்வாறு கிரிஸ் ராக் பேசியதும் சற்று கோபமாக வில் ஸ்மித் மேடை ஏறி சென்று கிரிஸ் ராக்'கை கை ஓங்கி பளாரென அறைந்தார், இது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு மீண்டும் நகைச்சுவையாக பேசினார். 'அலோபீசியா' எனும் நோயினால் முடியை இழந்து வருந்தும் வில் ஸ்மித் மனைவி குறித்து இப்படிப்பட்ட சூழலில் கிண்டல் செய்தது வில் ஸ்மித்தை கோபமடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.