இனி நான் நடிக்கப்போவதில்லை - அமீர்கான் அதிரடி
By : Mohan Raj
நடிப்பிலிருந்து ஒதுங்க இருப்பதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'பாரஸ்ட் ஹம்ப்' படத்தை 'லால் சிங் சந்தா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் அமீர்கான், அவரே தயாரித்து, நடித்து வரும் இந்த படத்தின் பிரமோஷன் விழாவில் அமீர்கான் கூறியுள்ளதாவது, "நான் நடிக்கத் தொடங்கியபோது என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்தேன், அதனால் நான் அவர்களை சாதாரணமாக கருதி விட்டேன் நான் சுயநலவாதி. என்னைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என் குழந்தைகளுடன் இருந்தேன் ஆனால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை இந்த துயரத்தை 57'வது வயதில் உணர்ந்திருக்கிறேன் 86'வது வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
சினிமா என்னை என் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டதாக உணர்ந்தேன், இனி நான் நடிக்க மட்டேன் திரைப்படங்களைத் தயாரிப்பது என என் குடும்பத்தாரிடம் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள் என் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தினர்" எனக் கூறினார்.