Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த முறை ஆடியோ லான்ச் இல்லை - டிவி பேட்டி மட்டும்தான் 'பீஸ்ட்' விஜய்யின் அதிரடி முடிவு

இந்த முறை ஆடியோ லான்ச் இல்லை - டிவி பேட்டி மட்டும்தான் பீஸ்ட் விஜய்யின் அதிரடி முடிவு

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2022 9:15 AM GMT

ஏப்ரல் 10'ம் தேதி விஜய்'யின் பிரத்யோக பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.




சில வருடங்களாக தன் படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தும் வழக்கத்தினை நடிகர் விஜய் வைத்துள்ளார், பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடத்தி படத்தை பிரமோஷன் செய்து மேலும் அதில் சில விஷயங்களை பேசி பரபரப்பாக்குவது விஜய்யின் வழக்கமாக இருந்தது, இந்நிலையில் தற்போது வெளியாகவிருக்கும் விஜய் 'பீஸ்ட்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 'பீஸ்ட்' படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா இல்லை.




இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் வேறு எந்த வகையிலாவது 'பீஸ்ட்' பட பிரமோஷன் நடக்குமா என எதிர்பார்த்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 10'ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'பீஸ்ட்' படக்குழுவினருடன் விஜய் இணைந்து சிறப்பு நேர்காணலை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் கலந்து கொள்ளவிருக்கும் தொலைக்காட்சி நேர்காணல் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News