Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

விஜய்சேதுபதியுடன் இணையும் விக்ரம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

Mohan RajBy : Mohan Raj

  |  1 April 2022 7:20 AM GMT

விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.




தற்பொழுது விக்ரம் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார், இதுமட்டுமல்லாது 'துருவநட்சத்திரம்' வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 'சார்பட்டா பரம்பரை' இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் துவங்கவிருக்கிறது. இதுபோக 'கடைசி விவசாயி' மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படமும், விஸ்வரூபம்-2 இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




இந்நிலையில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி எதிர் நாயகனாக நடிக்க விக்ரம் நடிக்கும் படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News