'கடவுள் அனுமதித்தால் இறுதி மூச்சு வரை நடிப்பேன்' - உருகிய சஞ்சய் தத்

"நான் கலைஞன், கடவுள் அனுமதித்தால் என் இறுதி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்" என நடிகர் சஞ்சய் தத் உருக்கமாக பேசியுள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது வெளிவிருக்கும் 'கே.ஜி.எப் 2' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சஞ்சய்தத் கூறியதாவது, "நான் செய்யும் வேலையை விரும்பி செய்கிறேன். நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது, 45 ஆண்டுகளாக இந்த சினிமாத்துறையில் இருக்கிறேன் இன்னும் நிறைய திறமையானவர்கற் இன்று இந்தத் துறையில் வளர்ந்து வருகிறார்கள்" என கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், "நான் கலைஞன், கடவுள் அனுமதித்தால் நான் என் இறுதி மூச்சு இருக்கும் வரை நடிப்பேன்" என உருக்கமாக பேசினார். கடந்து 2020 ஆம் அண்டில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது புற்றுநோயிலிருந்து குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.