Kathir News
Begin typing your search above and press return to search.

"இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது" - வெளியானது விஜய்'யின் 'பீஸ்ட்' ட்ரெய்லர்

இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட்டாகாது - வெளியானது விஜய்யின் பீஸ்ட் ட்ரெய்லர்

Mohan RajBy : Mohan Raj

  |  2 April 2022 3:30 PM GMT

தளபதி விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக உலா வருகிறது.




இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த படம் 'பீஸ்ட்', வரும் ஏப்ரல் 13'ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ஹிட்டடித்துள்ளது.




ஒரு ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் பொதுமக்களை பணய கைதிகளாக கடத்தி வைத்திருக்கும் நிலையில் அவர்களை மீட்கும் சோல்ஜர் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். பரபர ஆக்ஷ்ன் காட்சிகள், விஜய்யின் ஸ்டைலான லுக், ஆங்காங்கே நெல்சன் திலீப்குமார் ஸ்டைல் காமெடி என பீஸ்ட் ட்ரெய்லர் இணையத்தில் விஜய் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக விஜய் பட டிரெய்லர்கள், பாடல்கள் என்றால் இணையத்தில் அதிகம் ஹிட்டடிக்கும். அந்த வகையில் வெளியான 24 மணி நேரத்தில் 'பீஸ்ட்' ட்ரைலர் எந்த மாதிரியான யூட்யூப் சாதனையை நிகழ்த்தும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News