பாஸ்போர்ட் விவகாரத்தில் மனைவி மீது டி.இமான் புகார்

இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவி மீது பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டி.இமானின் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுக்கும் புதிதாக பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு அழைத்து செல்ல திட்டமிட்டிருப்பதாக டி.இமான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து ஆகி உள்ளது. நான் என் குழந்தைகளை பார்க்க கூடாது என்பதற்காகவே என் குழந்தைகளை வெளிநாடு அழைத்துச் செல்ல திட்டமிட்ட என் மனைவி ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருக்கும் எனது குழந்தைகளுக்கு புதிதாக பாஸ்போர்ட் எடுத்துள்ளார். இதனை விசாரிக்க வேண்டும்" என பாஸ்போர்ட் அலுவலகத்தில் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் டி.இமான்.